Home » Entries posted by Shankar U (Page 242)
Entries posted by Shankar

நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

Comments Off on நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continue reading …

தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

Comments Off on தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து […]

Continue reading …

ஓடிடியின் வருமானத்தில் பங்கு வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்!

Comments Off on ஓடிடியின் வருமானத்தில் பங்கு வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு மட்டுமல்லாமல் கோரிக்கைகள் விடுத்து, தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது. அதன்படி திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேண்டுகோள், புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும். ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பர போஸ்டர்ஸ்களுக்கு 1% (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிபட்சமாக 60 சதவிகிதம் தான் பங்குத் தொகையாகக் […]

Continue reading …

கலெக்டரின் வேண்டுகோள்!

Comments Off on கலெக்டரின் வேண்டுகோள்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடியில் உள்ள தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அது, உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, […]

Continue reading …

வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

Comments Off on வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

வெளிமாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் கடந்த சில தினங்களாக பெய்யும் பருவமழை காரணமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு […]

Continue reading …

இயக்குனரின் நன்றி டுவிட் பதிவு!

Comments Off on இயக்குனரின் நன்றி டுவிட் பதிவு!

அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான “ஜவான்” படத்தின் பிரிவியூ வீடியோ 112 மில்லியன் வியூஸ் எட்டியுள்ளதையடுத்து நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை […]

Continue reading …

நடிப்புக்கு பிரேக் விடும் பிரபல நடிகை?

Comments Off on நடிப்புக்கு பிரேக் விடும் பிரபல நடிகை?

பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான “சிட்டாடல்” தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “சிட்டாடல்” வெப் தொடரில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் இருக்கும் ஒரே […]

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் […]

Continue reading …

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

Comments Off on தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை “மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை” என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எவ வேலு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று […]

Continue reading …