
தமிழக அரசு சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு […]
Continue reading …
பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு […]
Continue reading …
ஹிப்பாப் ஆதி, “மரகத நாணயம்” திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே. சரவன் இயக்கத்தில் “வீரன்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் இதற்கு முன்பாக ரிலீசான படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. காமெடி பேண்டசி திரைப்படமான இத்திரைப்படம் ஜூன் 2ம் தேதி ரிலீசாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இப்போது படம் ரிலீசாகி ஒரு மாதமாகி தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. ஜூன் 30ம் தேதி முதல் “வீரன்” திரைப்படம் […]
Continue reading …
விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டூடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர். பின்னர் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ். இப்போது […]
Continue reading …
தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.சூரியசக்தி மின் வேலிகள் உள்பட அனைத்து மின் வேலிகள் அமைப்பதற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதனை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் வேலிகள் அமைப்பு என்பது காப்பு காடுகளிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி […]
Continue reading …
சென்னை ஐஐடி இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இப்பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. 72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 62.74 புள்ளிகளுடன் 15ம் இடத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 17ம் இடத்தில் […]
Continue reading …
புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன என கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரை தப்பிக்க வைத்து விட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? 22 கிலோ கஞ்சாவை காவல் நிலைய காவல்துறையினர் […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “மாமன்னன்” திரைப்படம் “ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மாமன்னன்” திரைப்படம் ஓடுனா என்ன? ஓடலைன்னா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகிறது? அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டது, கொரனாவை சிறப்பாக எதிர்கொண்டது, ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது. […]
Continue reading …
வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு செய்து வருகிறது. சில அலுவலகங்களில் விடிய விடிய 17 முதல் 20 மணி நேரம் வரை ரெய்டு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடந்ததாகவும் கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய தகவல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 17 மணி நேரத்துக்கு மேலாக […]
Continue reading …
தமிழகத்தில் சமீப காலமாக தக்காளி விலை கடும் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது தற்போது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ சீரகம் 300 ரூபாய் என விற்பனையானது. ஆனால், தற்போது 400 ரூபாய் உயர்ந்து 700 என விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.160 என்றும், புளி 200 ரூபாய் என்றும், உளுத்தம் பருப்பு […]
Continue reading …