Home » Entries posted by Shankar U (Page 241)
Entries posted by Shankar

3 முன்னணி நடிகர்களை இணைக்கும் முயற்சியில் கௌதம் மேனன்!

Comments Off on 3 முன்னணி நடிகர்களை இணைக்கும் முயற்சியில் கௌதம் மேனன்!

2006ம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் டிஜிட்டலில் உருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப்படங்கள் 7 ரிலீசான நிலையிலும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் “விரைவில் “வேட்டையாடு விளையாடு 2” திரைப்படத்துக்கான வேலைகள் தொடங்கும். கமல் […]

Continue reading …

மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

Comments Off on மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேசப்படும் ஒரு விவாதமாக மாறி உள்ளது மணிப்பூரில் சில மாதங்களாக நடந்துவரும் கலவரம். ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஆறு நாடாளுமன்ற குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மணிப்பூரின் நிலைமை என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் இத்தீர்மான கோரிக்கை […]

Continue reading …

எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ChatGPT என்ற தொழில்நுட்பம் முன்னணி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தற்போது செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தை அறிமுகம் செய்து வருகிறது. ChatGPTக்கு போட்டியாக xAI என்ற புதிய நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் எந்த […]

Continue reading …

பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

Comments Off on பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி […]

Continue reading …

நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

தமிழகம் முழுவதும் இரவு பாடசாலை நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ம் தேதி முதல் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கு செல்ல முடியாதவர்கள் கல்வி பயில்வதற்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் […]

Continue reading …

தமன்னாவுக்கு விருது!

Comments Off on தமன்னாவுக்கு விருது!

நடிகை தமன்னாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் “கண்ணே கலைமானே.” இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தை சர்வதேச பட […]

Continue reading …

நடிகையின் செல்போனை பறித்த நபரால் பரபரப்பு!

Comments Off on நடிகையின் செல்போனை பறித்த நபரால் பரபரப்பு!

முன்னணி நடிகையான ராஷ்மிகாவின் செல்போனை ரசிகர் ஒருவர் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கார்த்தியுடன் “சுல்தான்,” விஜய்யுடன் “வாரிசு,” அல்லு அர்ஜூனுடன் “புஷ்பா 1” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது “புஷ்பா -2” திரைப்படத்தில் நடித்து வருவதுடன் இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்துள்ள “அனிமல்” படம் வரும் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது. விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகை ராஷ்மிகா மும்பை […]

Continue reading …

“ஆர்.ஆர்.ஆர்” 2ம் பாகம் குறித்து புதிய தகவல்!

Comments Off on “ஆர்.ஆர்.ஆர்” 2ம் பாகம் குறித்து புதிய தகவல்!

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனரான ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி, உள்ளிட்டோர் நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்பட சாதனையை முறியடித்து வசூலில் சாதனையை படைத்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் […]

Continue reading …

368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

Comments Off on 368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இவ்வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 368 இடங்களில் […]

Continue reading …

வானதி சீனிவாசன் ஆவேசம்!

Comments Off on வானதி சீனிவாசன் ஆவேசம்!

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியும், “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினார், ஆனால் தரவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை […]

Continue reading …