
ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் மும்மைப ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தின் நின்று இரண்டு சிறுவர்கள் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் சிறுவர்கள் கைகளைக் கழுவியபடி இருந்தனர். அதில் ஒரு சிறுவன் கைகளைக் கழுவிட்டு தண்ணீர் குடித்த பின், இன்னொரு சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்தார். உடனே ரயில் அருகில் வரும் சத்தம் கேட்டு, ஓரமாக ஒதுங்கிவிட்டார். ஆனால், […]
Continue reading …
இன்று 4வது நாளாக பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாண்டர் புற நகரில் உள்ள ஒரு பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக இளைஞர் நீல் (17வயது) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார், இதனால் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் […]
Continue reading …
மத்திய அரசு ஏற்கனவே பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இன்றுடன் பான் கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை […]
Continue reading …
நேற்றிரவு ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில், “கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு […]
Continue reading …
நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]
Continue reading …
அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரானார் ஹெச் வினோத். இவர் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். அஜீத்தை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். இப்போது வினோத், கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய […]
Continue reading …
யோகி பாபு, ஹன்சிகா, “மிருகம்“ ஆதி ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “பாட்னர்.” படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். ராயல் பார்ட்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை காமெடி கலந்த அறிவியல் புனைவு படமாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 […]
Continue reading …
உலகளவில் பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் “மகதீரா,” “நான் ஈ,” “பாகுபலி” மற்றும் “ஆர்.ஆர்.ஆர்.” என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது. “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ […]
Continue reading …
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது), அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மாமன்னன்” திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …