Home » Entries posted by Shankar U (Page 317)
Entries posted by Shankar

இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

Comments Off on இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உட்பட பல மொழிப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வகையில், பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீசாகிறது. பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் வெளியாகிறது. ரிலீஸ் ஹண்ட்டர் இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீசாகிறது. செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. […]

Continue reading …

‘விடுதலை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

Comments Off on ‘விடுதலை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக இருக்கும் “விடுதலை” திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெற்றிமாறனின் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதால் 18 வயது உட்பட்டோர் திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப அனுமதி […]

Continue reading …

அவசரமாக டில்லி சென்ற கவர்னர்!

Comments Off on அவசரமாக டில்லி சென்ற கவர்னர்!

தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இயற்றப்பட இருப்பதையடுத்து அவசரமாக டில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் 6 மாதம் கழித்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. […]

Continue reading …

புதுவை முதலமைச்சரின் வேதனை!

Comments Off on புதுவை முதலமைச்சரின் வேதனை!

புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியது. புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் […]

Continue reading …

பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Comments Off on பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பெருமளவு வருகை புரிவதால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வட மாநில தொழிலாளர்கள் தமிழ் மக்கள் ஒப்பந்தம் செய்யும் தொகையினை விட குறைவான தொகைக்கு வேலை செய்வதால் தமிழர்களின் வேலை பாதிக்கப்படுவதாக பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல இடங்களில் தங்களது வேலை வாய்ப்பினை பறித்துகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் மாநில […]

Continue reading …

ஓபிஎஸ் மகன் பிரதீப் வலைதள பதிவு!

Comments Off on ஓபிஎஸ் மகன் பிரதீப் வலைதள பதிவு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம். காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த […]

Continue reading …

மகன் கல்லறையில் கி.யூ.ஆர்.கோட்-ஐ பதித்த பெற்றோர்!

Comments Off on மகன் கல்லறையில் கி.யூ.ஆர்.கோட்-ஐ பதித்த பெற்றோர்!

இறந்த மகனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டி, கல்லறையில், கியூ.ஆர். கோட்-ஐ பதித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த பெற்றோர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குரியாச்சிராவச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. இவர்களின் மகன் ஐவீன் பிரான்சிஸ் உடன் ஓமன் நாட்டில் வசித்து வந்தனர். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இசை மற்றும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும்போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மகனின் இழப்பைத் தாங்க […]

Continue reading …

டுவிட்டரின் திடீர் முடிவு!

Comments Off on டுவிட்டரின் திடீர் முடிவு!

டுவிட்டர் நிறுவனம் ப்ளூ டிக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளமான டுவிட்டரை உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகளுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் அறிவித்தது. கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் நடைமுறைக்கு முன்னதாகவே ப்ளூ டிக்கை இலவசமாக […]

Continue reading …

டில்லியில் அண்ணாமலை பேட்டி!

Comments Off on டில்லியில் அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கூட்டணி கட்சிகள் இடையே சில சிராய்ப்புகள் வருவது அரசியலில் சகஜம்தான்” என டில்லியில் பேட்டியளித்துள்ளார். நேற்று டில்லி சென்ற அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிரதமர் மோடி அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகியவர்களை பல்வேறு விஷயங்களை சந்தித்தேன். கர்நாடக மாநில தேர்தல் உள்பட பல […]

Continue reading …

அதானியை கைது செய்; மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை!

Comments Off on அதானியை கைது செய்; மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை!

மம்தா கட்சியின் எம்பிக்கள் தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானியை பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக குறைந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் […]

Continue reading …