Home » Entries posted by Shankar U (Page 316)
Entries posted by Shankar

பிரான்ஸில் டிக்டாக் செயலிக்கு தடை!

Comments Off on பிரான்ஸில் டிக்டாக் செயலிக்கு தடை!

டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே இந்தியா, கனடா, பெல்ஜியம், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியிருந்தததாவது “நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது. ரஷியா நாட்டிலும், டிக்டாக், ஸ்னாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்கள் பயங்கரவாத ஆப்களாக […]

Continue reading …

மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

Comments Off on மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

மூதாட்டி ஒருவரின் சடலம் ஒன்று எரிந்த நிலையில் சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டியில் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடந்த மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Continue reading …

சசிகலா ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா?

Comments Off on சசிகலா ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா?

சசிகலா சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என்று கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை நேற்று சட்டமன்றத்தில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் “மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் […]

Continue reading …

அமித்ஷாவின் பலே திட்டம்..!

Comments Off on அமித்ஷாவின் பலே திட்டம்..!

அமித்ஷா அதிமுக மற்றும் திமுக இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பலே திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்சாவை சந்தித்து தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க இருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுகவை வீழ்த்த பலவீனமாக உள்ள அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சிறந்தது அல்ல என்ற கருத்தை அண்ணாமலை முன் வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து […]

Continue reading …

திமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

Comments Off on திமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

பாராளுமன்றத்திலிருந்து திமுக எம்பிக்கள் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா குறித்து பேச அனுமதி அளிக்கவில்லை என கூறப்பட்டதையடுத்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சபாநாயகர் இடம் வேண்டுகோள் கொடுத்தனர். ஆனால் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டதன் காரணமாக மக்கள் அவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. […]

Continue reading …

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பற்றி தகவல்!

Comments Off on பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பற்றி தகவல்!

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான இவர், இங்கிலாந்து நாட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மூளையில், ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் […]

Continue reading …

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; ராகுல்காந்தி ஆவேசம்!

Comments Off on மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; ராகுல்காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி” என்று ஆவேசமாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மோடி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அவர் லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் ஆவேசம் அடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி. சிறை […]

Continue reading …

கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கி கோழிகள் உயிரிழப்பு!

Comments Off on கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கி கோழிகள் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தருமபுரியில் தனியார் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கியதில், 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீப்பிடித்தது. மின்னல் தாக்கி திடீரென்று தீப்பிடித்ததில், இதில் தீ கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இதில், கோழிப்பண்ணையில் […]

Continue reading …

பிரேக் அப்புக்கு ரூ.33 கோடி ஒதுக்கிய அரசு!

Comments Off on பிரேக் அப்புக்கு ரூ.33 கோடி ஒதுக்கிய அரசு!

ரூ.33 கோடியை பிரேக் அப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங்கிற்கு ஒதுக்கி உள்ளது நியூஸிலாந்து அரசு. காதலிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் தோல்வியடைந்தால் மனமுடைந்து விடுகின்றனர். இதனால் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சாரக் குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு 33 கோடி ஒதுக்கி உள்ளது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வர ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை […]

Continue reading …

நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

Comments Off on நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

நடிகை சாயிஷா சிம்புவின் திரைப்படத்திற்காக தான் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்துள்ளார். பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயிஷா. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் “அடாவடி” என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இதை குறித்து சமூகவலைதளங்களில் […]

Continue reading …