Home » Entries posted by Shankar U (Page 318)
Entries posted by Shankar

நடிகர் அஜீத்தின் தந்தை மறைவு!

Comments Off on நடிகர் அஜீத்தின் தந்தை மறைவு!

நடிகர் அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜீத் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு […]

Continue reading …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது?

Comments Off on டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது?

இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் இன்னும் முடிவுகள் வரவில்லை. இது குறித்த ஹேஷ்டேக் திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் வைரலானது. டிஎன்பிஎஸ்சி இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

Comments Off on காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் […]

Continue reading …

ஐஸ்வர்யாவின் பினாமி நான்; அதிர்ச்சி தகவல்!

Comments Off on ஐஸ்வர்யாவின் பினாமி நான்; அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் தன்னுடைய கணவரிடம் தான் “நான் ஐஸ்வர்யாவின் பினாமி” என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற […]

Continue reading …

கலிபோர்னியாவில் சூறாவளி புயல்!

Comments Off on கலிபோர்னியாவில் சூறாவளி புயல்!

அமெரிக்கா மாகாணத்தில் உள்ள கலிபோர்னியாவில் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயல் கடும் பாதிப்புகளையும்,300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்திவாய்ந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இதில், வீடுகளைச் சுற்றிலும் வெள்ள நீர்சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். […]

Continue reading …

அரசியலில் எனக்கு நண்பர்களும் கிடையாது; அண்ணாமலை!

Comments Off on அரசியலில் எனக்கு நண்பர்களும் கிடையாது; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் எனக்கு யாரும் நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறியுள்ளார். இன்று டில்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி படம் போல் இருக்கிறது. சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகிறார்கள் என்று தினமும் கேட்டு அவர்களை கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள் குழந்தைகள் மீது வன்பத்தை காட்டுபவர்கள் […]

Continue reading …

அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்தவர் யார்?

Comments Off on அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்தவர் யார்?

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர் அனுமதியின்றி கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார். உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர். பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார். இதுகுறித்து, ஊழியர்கள் […]

Continue reading …

வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்!

Comments Off on வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்!

கரூர் மாவட்டத்தில் வாய்க்காலில் செத்துக்கிடக்கும் லட்சக்கணக்கான மீன்கள் துர்நாற்றம் அடித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாயும் தென்கரை மருதாண்டன் வாய்க்காலில் தண்ணீர் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீர் இலாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து விட்டுக்கட்டி, சிந்தலவாடி வரை தண்ணீர் ஆங்காங்கே ஒரு அடி மற்றும் 1/2 அடி மட்டம் வரை தேங்கிய நிலையில் மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மிதக்கின்றன. […]

Continue reading …

அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி ஆரம்பம்!

Comments Off on அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி ஆரம்பம்!

வரும் 24 ஆம் தேதி அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான கோவில் என்று கூறப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான நாயனார் பதிகம் பாடிய சிறப்பு பெற்ற தலமிது. இந்த நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே திருப்பணிகள் […]

Continue reading …

ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு!

Comments Off on ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் தற்போது அவருக்கு நுரையீரல் […]

Continue reading …