Home » Entries posted by Shankar U (Page 331)
Entries posted by Shankar

மு.க.ஸ்டாலின் – பினரயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சி!

Comments Off on மு.க.ஸ்டாலின் – பினரயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சி!

தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும்நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1822ம் ஆண்டு திருவதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஒரு சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோல் சீலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இதற்கு தெரிவித்து நடந்த தோல்சீலை போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றனர். இந்த போராட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோல் சீலை போராட்டம் பொதுக்கூட்டம் […]

Continue reading …

100 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேய்ன படம்!

Comments Off on 100 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேய்ன படம்!

இயக்குனர் முருகதாஸ் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மெஹா பட்ஜெட் திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து “துப்பாக்கி,” “கத்தி” மற்றும் “சர்கார்” ஆகிய ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் […]

Continue reading …

நடிகை குஷ்புவின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on நடிகை குஷ்புவின் அதிர்ச்சி தகவல்!

நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு அவரது சிறுவயதில் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவியும் ஆவார். அரசியலில் இணைந்த குஷ்பூ இதற்கு முன்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கருத்து வேறுபாட்டால் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்து செயலாற்றி வந்தார். தற்போது […]

Continue reading …

ராஜேந்திர பாலாஜியின் கருத்து!

Comments Off on ராஜேந்திர பாலாஜியின் கருத்து!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆடு, மாடு தவிர அனைத்தையும் கொடுத்தனர் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருது நகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது, “திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் […]

Continue reading …

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் கருத்து!

Comments Off on தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் கருத்து!

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. தெலுங்கானா சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதிக்கு பிறகு எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தெலுங்கானா அரசு “ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார். அரசியல் அமைப்பு சட்டம் […]

Continue reading …

ராகவா லாரன்ஸின் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Comments Off on ராகவா லாரன்ஸின் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

நடிகர் ராகவா ராலன்ஸின் “ருத்ரன்” திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. நடிகர், மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து […]

Continue reading …

ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

Comments Off on ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

85 வயது முதியவர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாத் சிங் 85 வயது முதியவர் கடைசி காலத்தில் தன்னை பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் பிள்ளைகளால் மனவிரக்தி அடைந்து தனக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உத்தர பிரதேச மாநில அரசுக்கு வழங்குவதாக உயிர் எழுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்று […]

Continue reading …

தங்கர் பச்சான் படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Comments Off on தங்கர் பச்சான் படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாரதிராஜா நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி […]

Continue reading …

அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு!

Comments Off on அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு!

சண்டைக்காட்சி ஒன்று ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொண்டிருந்த அமிதாப்பச்சனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் “ப்ராஜெக்ட் கே.” படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அதில் அமிதாப் பச்சன் நடித்துக் கொண்டிருந்தபோது […]

Continue reading …

சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

Comments Off on சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் காதலில் விழுந்துள்ளார். இதனால் கர்ப்பவதியான அவர் சுயபிரசவம் செய்ததால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் சில மாதங்களிலேயே கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடக்கூடும் என்று பயந்ததால், அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து […]

Continue reading …