Home » Entries posted by Shankar U (Page 334)
Entries posted by Shankar

பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

காய்ச்சலால் பீதி வேண்டாம்; சுகாதாரத்துறை அறிவிப்பு!

Comments Off on காய்ச்சலால் பீதி வேண்டாம்; சுகாதாரத்துறை அறிவிப்பு!

சுகாதாரத்துறை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதீத காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருவகையான புதிய வைரஸ் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் […]

Continue reading …

22 மணி நேரமும் தூக்கமா?

Comments Off on 22 மணி நேரமும் தூக்கமா?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஜோனா என்பவர் கடந்து சில ஆண்டுகளாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எப்போதும் சோர்வாக இருப்பதாகவும் எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுமார் 22 மணி நேரம் அவர் தூங்குவதாகவும் இதனால் தனது கணவர் மற்றும் […]

Continue reading …

மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

Comments Off on மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உழவர்கள் மானியத்துடன் கூடிய உரங்களை வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத்தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், மானிய செலவினங்கள் முறைப்படுத்தவும், மானிய விரயங்களை தவிர்க்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் […]

Continue reading …

“விடுதலை’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Comments Off on “விடுதலை’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் திரைப்படமான ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, “விடுதலை” படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார். சமீபத்தில் இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் மார்ச் 31ம் தேதி “விடுதலை” படத்தின் […]

Continue reading …

டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “இரட்டை இலை என்றால் டெபாசிட் போயிருக்கும்” என்று அதிமுகவின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார். திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி […]

Continue reading …

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டில்லியில், உள்ள சர்கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, கங்காராம் மருத்துவர்கள், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் கங்கா ராம் […]

Continue reading …

இன்று பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கல்!

Comments Off on இன்று பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கல்!

இன்று முதல் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கு பொது தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளை சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று […]

Continue reading …

ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார்!

Comments Off on ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார்!

பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது மோசடி புகார் அளித்துள்ளார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் ஷாருக்கான். இவரது மனைவி கவுரி கான் சினிமா தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும், கவுரி கான் டிசைன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது பிரபல தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா லக்னோவில் துல்சியானி நிறுவனம் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற […]

Continue reading …

பழமையான மம்மியை காதலிக்கும் இளைஞர்!

Comments Off on பழமையான மம்மியை காதலிக்கும் இளைஞர்!

இளைஞர் ஒருவர் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை காதலித்து வந்ததாக கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது என்ற நிலை மாறி தற்போது பலர் தாங்கள் வைத்திருக்கும் ஏதோ ஒரு பொருளை தீவிரமாக காதலிப்பதும், அதையே மணந்து கொள்வதுமான விசித்திர சம்பவங்கள் கூட ஆங்காங்கே நடைபெறுகிறது. சமீபத்தில் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது பெருவை சேர்ந்த இளைஞர் […]

Continue reading …