
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் சர்வதேச தரத்திற்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையார், பெருங்குடி போன்ற பகுதிகளில் உள்ள […]
Continue reading …
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இன்று டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படியே இன்று நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மிதமான மழைக்கே நாகை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. […]
Continue reading …
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]
Continue reading …
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துக்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இத்தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்து […]
Continue reading …
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற ஓலா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காரில் […]
Continue reading …
வடலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடலூரில் ஆணழகன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் பெரிய கொல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் பயிற்சியில் […]
Continue reading …
தகவல் அறியும் உரிமை மூலமாக மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தகவல்கள் வளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மதுரையில் மத்திய அரசின் பல்நோக்கு நவீன மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இதற்காக கல் நடப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது தொடர் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே காலத்தில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை குஷ்பூவுக்கு பாஜக மேலிடம் கூடுதல் பதவி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற பதவியையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. நடிகை குஷ்பூவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய குழு உறுப்பினரான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக […]
Continue reading …
ஈபிஎஸ் பிப்ரவரி 25ல் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 25ஆம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. மாநிலம் முழுதும் 186 தேர்வு மையங்களில் பிப்ரவரி 25ம் தேதி நடந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் குளறுபடி சரி செய்யப்பட்டு மீண்டும் காலதாமதமாக தேர்வு நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் […]
Continue reading …