
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா அஜீத் 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அஜீத்தின் 62வது திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜீத் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இத்திரைப்படத்திலிருந்து […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் […]
Continue reading …
பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உஷா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி விரிந்தா திரிபாதி(16). அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன் கிழமை அன்று வழக்கம் போல் அவர் பள்ளிக்குச் சென்றார். குடியரசுத் தினவிழாவுக்கு ஒத்திகை நடந்த நிலையில், ஒத்திகை முடிந்தபின் அவர் வகுப்பிற்குச் சென்றார். வகுப்பிற்குச் சென்றதும் அவர் மயங்கி விழுந்தார். […]
Continue reading …
நிதிஸ்குமார் தலைமையில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவின் சகோதரர் நியமல் சவுபே மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, 2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பகல்பூரில் வசித்து வரும் நிர்மல் சவுபேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்தார். எனவே, மருத்துவர்கள் அலட்சியத்தால் அவர் […]
Continue reading …
வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
Continue reading …
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பதான்.” யஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான பாலிவுட் படங்கள் வெற்றிபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஷாருக்கானின் பதான் படம் ஒட்டுமொத்த பாலிவுட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள […]
Continue reading …
மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் விகே சிங் பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அந்த பகுதி விவசாயிகள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் நெல்லையில் […]
Continue reading …
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நல்லகண்ணு தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நல்லகண்ணு. அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து […]
Continue reading …
காதல் ஜோடி சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையமருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு 8:15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். காதலன் படுகாயத்துடன் இருந்த நிலையில், ரயில்வே போலீசார் அவரை மீட்டு […]
Continue reading …
பாகிஸ்தானில் பொருளாதார பின்னடைவு காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பின்னுக்கு தள்ளப்படும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு அமெரிக்க […]
Continue reading …