மாலை மரியாதைகளுடன் நீலகிரியில் மனு தாக்கல் செய்தார் ஆ.ராசா. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நீலகிரி மாவட்ட கழக அலுவலக அறிவாலயத்தில் இன்று முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக தோழமை கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கழக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி குழு […]
Continue reading …ஆண்டி முத்து ராசாவுக்காக, மூன்று ராஜாக்களை மூன்று தொகுதிகளில் களம் இறக்கும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம். வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி மூன்று இடத்தில் போட்டியிடுகிறது வெள்ளாளர் முன்னேற்ற கழகம். முதலாவதாக திருநெல்வேலி வேட்பாளர் புல்லட் ராஜாவும், இரண்டாவது வேட்பாளராக தேனி மக்களவைத் தொகுதியில் பந்தல் ராஜாவும், மூன்றாவதாக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் M.N.B.ராஜாவும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இத்தனை வேட்பாளர்கள் நிற்பதற்கு காரணம் ஆண்டிமுத்து ராஜா தான் என்கிறார்கள் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.
Continue reading …வேட்புமனுவை மறந்து விட்டு வந்த தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். அப்சட்டான அமைச்சர் மூர்த்தி. இன்று காலை 11: 25 மணி அளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன். கையில் வேட்புமனு இல்லாமல் வருகை தந்தார். பின்னர் 11:35 மணிக்கு அவரது உறவினர் வேட்புமனுவை கொண்டு வந்தனர். கையில் வேட்புமனு இல்லாமல் வந்த தங்க தமிழ்ச்செல்வனால் அமைச்சர்கள் […]
Continue reading …மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு செய்தியாளர்கள் சந்திப்பு! ▪️ இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 3.06 கோடி ஆண்கள், 3.16 கோடி பெண்கள், என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ▪️ இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் […]
Continue reading …பம்பரம் சின்னம் ஒதுக்காதது குறித்து திருச்சி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ பேட்டி: தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை அவர்களும் ஒதுக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜ.க வை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே இது போன்று வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது.
Continue reading …மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். முக்கிய வாக்குறுதிகள்: • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும் • அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மகக்ள் தொகைக்கு இடையாக இட ஒதுக்கூடி வழங்கப்படும் • ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. • மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நவடடிக்கை எடுக்கப்படும் • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை […]
Continue reading …வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம். திருச்சியில் நடந்தது. திருச்சியில் கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற சமூகம் சார்ந்த பயிற்சி முகாம் இறகுகள் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் “தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம்” (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி வாலிகண்டபுரம், பெரம்பலூர்) கல்லூரியில் பயிலும் வேளாண் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரகப்பணி அனுபவ பயிற்சிகளை பெற்றனர். இறகுகள் தொண்டு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற மாணவிகளுக்கான பயிற்சியினை இறகுகள் தொண்டு நிறுவனத்தின் […]
Continue reading …மயிலாடுதுறை தொகுதியில் ஆர்.சுதா போட்டி மக்களவை தேர்தல் = மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா போட்டி நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு
Continue reading …‘பாரத் மாதா கி ஜே’ கோஷத்தை அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர் உருவாக்கினார், இஸ்லாமியர் உருவாக்கியதால் இந்த கோஷத்தை சங்பரிவார் அமைப்புகள் கைவிடுமா? ” -கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
Continue reading …பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
Continue reading …