*மார்ஷல் நேசமணி நினைவு நாள்*. மாவட்ட ஆட்சியர் மரியாதை. *குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவு தினத்தினையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை*
Continue reading …சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம். வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல். சாலையில் பள்ளத்தை சுற்றி தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.
Continue reading …சிதம்பரம் பல்கலை. தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.1 லட்சம் திருட்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியல் கல்லூரியில் பணிபுரியும் தொழில்நுட்ப உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளனர்.
Continue reading …திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தை சாலையில் அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் பிளைவுட்ஸ் கடையில் தீ விபத்து. கடையில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் இருந்து சேதம். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Continue reading …ஆவின் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக குற்றச்சாட்டு. மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர். அதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர். “கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது” என்று ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
Continue reading …மதுரை விஜய் ரசிகர்கள் மீது கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு. உலக பட்டினி தினத்தையொட்டி, விஜய் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர். இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், ” அனுமதியின்றி கோயில் அன்னதான கூடத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கட்சிக் கொடியை காட்டி பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக”, நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Continue reading …திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பக்தர்கள் கொண்டு வரும் கை பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்ய நவீன கம்ப்யூட்டருடன் கூடிய மெட்டல் டிடெக்டர் கருவி ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த கருவியை திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் குருசாமி துவக்கி வைத்தார்.
Continue reading …கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து. மினி பேருந்தில் சென்னை அம்பத்தூரில் இருந்து சுற்றுலா ஒகேனக்கல் சுற்றுலா சென்ற 21 பேருக்கு படுகாயம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
Continue reading …மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 89.53 ஏக்கர் நிலம் தேவை. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, ” விமான நிலைய விரிவாக்க பகுதிக்கு தேவைப்படும், 86.20 ஏக்கர் பரப்பளவில் ஈச்சனோடை அருகே உள்ள இரு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இதுவரை ஒப்படைக்க வில்லை ” என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் பதில் […]
Continue reading …*தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை* தமிழ்நாட்டில், 80 இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் இவற்றை புதுப்பித்து, தமிழ்நாட்டு நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Continue reading …