ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் பா.ஜ.க கிராம ஊராட்சி மன்ற தலைவரான சஜ்ஜாத் அகமத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் சஜ்ஜாத் அகமது. காசிகுண்டில் கிராமத்தில் இருக்கும் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.
இதைப்போல இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சேர்ந்த பஞ்சாயத் தலைவர் ஆரிப் அகமது என்பவரை தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.