தமிழகம் முழுதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தற்போது அவர் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. முதல் கட்டமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இத்தகவலை திமுக மறுத்துள்ளது. இதனை அடுத்து தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அவர் ஏப்ரல் 29ம் தேதி கொடைக்கானல் சென்று மே 4ம் தேதி வரை அங்கு ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி குறைவாக மத்திய அரசு ஒதுக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு […]
Continue reading …திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீம நகர் அருகிலுள்ள யாதவ தெருவில் ஆம்புலன்ஸ் வசதி அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் மாநில தலைவர் பீம நகர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வழக்கறிஞர்கள் முஸ்ஃபிரா, ஆனந்தகுமார், 52-வது வார்டு […]
Continue reading …சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி […]
Continue reading …தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் விசாரணை […]
Continue reading …மதுரையில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை […]
Continue reading …கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம், “இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக […]
Continue reading …மாவோயிஸ்ட் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியிருப்பதாக கூறும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளராக்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கிறது. ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் […]
Continue reading …தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பிரிவினை குறித்து பேசியதாக பாரதிய ஜனதாவும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளன. இப்புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகிய […]
Continue reading …உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 2019ல் அசம்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் மீண்டும் கன்னூஜ் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னூஜ் தொகுதி அகிலேஷ் யாதவ்வின் குடும்ப தொகுதி போன்றது. […]
Continue reading …