
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் வந்துள்ளது. இதனை பற்றி அதிகாரிகளின் கணக்கு படி இந்த நில அதிர்வு தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இடங்களில் இருக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு வந்துள்ளது.
Continue reading …
தற்போது கொரோனா வைரஸ் பரவுதலில் மத்தியில், கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கும் மற்றும் இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ.மொஹம்மத் ரியாஸுக்கும் இன்று திருவனந்தபுரத்தில் எளிமையாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த திருமணம் முதல்வரின் கிளிஃப் இல்லத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மேலும், உறவினர்களை தவிர்த்து கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் […]
Continue reading …
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் திடீரென காணவில்லை என தகவல் வெளியாகி வருகிறது. இதனை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். பின்னர் இரண்டு பேரையும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விரைவாக இருவரையும் கண்டுபிடிக்க வேண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு வலியுறுத்தி உள்ளது. மேலும், இதற்கு முன்னர் டெல்லியில் வேலை பார்த்து வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரை இந்தியா நாட்டைவிட்டு அனுப்பியது. மே […]
Continue reading …
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் தொடர்பாக வெளியீட்ட செய்தியில்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக ரயில் போட்டிகளை வடிவமைப்பில் மாற்றம் செய்து 204 ரயில் பெட்டிகளை நான்கு மாநிலத்துக்கு அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்த 204 ரயில் போட்டிகளில் 70 பெட்டிகள் உத்திரப்பிரதேச மாநிலத்துக்கும், 54 பெட்டிகள் டெல்லி மாநிலத்துக்கும், 60 பெட்டிகள் தெலுங்கானா மாநிலத்துக்கும் மற்றும் 20 பெட்டிகள் […]
Continue reading …
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் டெல்லி மாநிலத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,214 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆறு நாளில் பரிசோதனையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா நிலவரத்தை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியரோடு அமித்ஷா […]
Continue reading …
சென்னை, ஜூன் 14 தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்குத் தொடர்வண்டித் துறையில் 96 […]
Continue reading …
அமெரிக்கா இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கும் வெண்டிலேட்டர் கருவிகள் நாளை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோன வைரஸை எதிர்த்துப் போராட தேவையான உயிர்காக்கும் கருவியான வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த வகையில் முதலில் 100 வென்டிலேட்டர் கருவிகள் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது சிகாகோவில் உள்ள ஸோல் என்கிற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களை ஏர் இந்தியா விமானத்தில் நாளை இந்தியாவுக்கு வருகின்றது. இந்த உயிர் […]
Continue reading …
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது முதல் முறையாக ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஐந்தாம் கட்ட ஊரடங்கு. இந்நிலையில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சந்தித்து ஆலோசனை […]
Continue reading …
திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடையை திறப்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
Continue reading …
முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி இவ்வாண்டும் தேர்வு, நேற்று என்.ஐ.ஆர்.எஃப், எம்.எச்.ஆர்.டி வெளியிட்டுள்ள “இந்தியா தரவரிசை 2020” இல் தொடர்ச்சியாக 5 வது ஆண்டாக என்ஐடி திருச்சிராப்பள்ளி அனைத்து என்ஐடிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சிராப்பள்ளி பொறியியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது, கடந்த ஆண்டில் 10 வது இடத்திலிருந்த கழகம், இவ்வாண்டில் 9வது இடத்தைப் பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மதிப்பெண் 61.62 ஆக […]
Continue reading …