
முதல் முறையாக இந்தியாவிலேயே கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் அமையவுள்ளது என்பதுதான் கூடுதல் தகவல். சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் […]
Continue reading …
ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு பாதைகள் சென்னையிலிருந்து புதுவை செல்ல பயன்படுத்தப்படும் பாதைகள். இந்த இரண்டு பாதைகளை சென்னையுடன் இணைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ரூபாய் 180 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி […]
Continue reading …
கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா போலவே விரைவில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு […]
Continue reading …
இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே […]
Continue reading …
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிராட்வே பகுதியில் உள்ள உரிமம் புதுப்பிக்காத 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி […]
Continue reading …
சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் உள்பட ஒரு சில திருத்தங்கள் செய்ய சமீபத்தில் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி உள்பட திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் […]
Continue reading …
அரசு டாக்டர்கள் சங்கம் வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர். […]
Continue reading …
இன்று மரணமடைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை செய்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ராஜீவ்காந்தி […]
Continue reading …
சென்னையிலிருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் 5வது சேவை சென்னை டூ பெங்களூரு டூ மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது. அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு […]
Continue reading …