Home » Archives by category » சென்னை (Page 36)

திரைப்பட பாணியில் ஹெராயின் கடத்தல்!

Comments Off on திரைப்பட பாணியில் ஹெராயின் கடத்தல்!
திரைப்பட பாணியில் ஹெராயின் கடத்தல்!

மாத்திரை வடிவிலான ஹெராயினை சென்னை விமான நிலையத்தில் கடத்தி வந்தவர் பிடிபட்டார். பல பன்னாட்டு விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்கிறது. தங்கம், போதைபொருள் போன்றவற்றை கடத்தி வரும் சிலர் பிடிபடும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணித்த ஒரு பயணியை சோதித்தபோது அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் ஹெராயின் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்து ஹெராயினை வெளியே எடுத்துள்ளனர். […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கு கொள்ளவிருக்கும் வீரர்கள் அனைவருக்கும் குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்பாட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

Comments Off on செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் […]

Continue reading …

துணைத்தலைவர் பதவியும் பறி போனதா?

Comments Off on துணைத்தலைவர் பதவியும் பறி போனதா?

அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமைக்கான ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியாருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தன்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரமில்லை என்று கூறி அதிமுக அலுவலகம் முன் ஓபிஎஸ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகமருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து எதிர்க்கட்சித் […]

Continue reading …

மெரீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on மெரீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மெரினாவில் பொதுமக்கள் இனிமேல் குளிக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் தடையை மீறி பலர் குளித்து வருகின்றனர். அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குளிக்கக் கூடாது என்று காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த போதிலும் ஒவ்வொரு மாதமும் மெரினாவில் குளிப்பதால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது […]

Continue reading …

ரஜினிகாந்த் நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு அஞ்சலி!

Comments Off on ரஜினிகாந்த் நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு அஞ்சலி!

நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாகவே நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் […]

Continue reading …

மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

Comments Off on மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இக்கூட்டத்தில் 200 கவுன்சிலர்களில் 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பலருக்கும் கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி […]

Continue reading …

உயர் நீதிமன்றம் போலீசுக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on உயர் நீதிமன்றம் போலீசுக்கு அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு […]

Continue reading …

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

Comments Off on நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]

Continue reading …

பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

Comments Off on பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க […]

Continue reading …