Home » Archives by category » சென்னை (Page 4)

அம்மா உணவகங்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி!

Comments Off on அம்மா உணவகங்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா உணவகம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள […]

Continue reading …

முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

Comments Off on முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக புதிய எம்பி-க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று […]

Continue reading …

லிட்டில் செஃப் போட்டி!

Comments Off on லிட்டில் செஃப் போட்டி!

குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு தனி திறமை பயிற்சி வகுப்புகள் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் ஃபோனிக்ஸ் என்ற தனியார் சென்டரில் நடைபெற்று வருகிறது. குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் “லிட்டில் செப்” என்ற தலைப்பில் நெருப்பில்லாமல் உணவு பொருட்களை வைத்து சமைக்கும் சமையல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பல உணவு பொருட்களை தட்டுகளில் வைத்து பல்வேறு விதமான உணவுப் பொருட்களை தயாரித்து செய்து காட்டினர். பின் அந்த உணவுப் பொருட்களை எவ்வாறு தயார் செய்தோம் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இ-மெயிலில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர். அதன்பின் விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்தது. இ-மெயில் அனுப்பியவரை போலீசார் தேடி வருவதாகவும், ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு […]

Continue reading …

போதை ஊசியால் 17 வயது சிறுவன் பலி!

Comments Off on போதை ஊசியால் 17 வயது சிறுவன் பலி!

17 வயது சிறுவன் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 6 மாதமாக வேலைக்குச் சென்றுள்ளான். வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளான். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து சிறுவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள் 4 பேரும் போதை ஊசி செலுத்திக் […]

Continue reading …

கட்சித் தலைவரை ஆள் வைத்து கொலை செய்த காங். பிரமுகர்!

Comments Off on கட்சித் தலைவரை ஆள் வைத்து கொலை செய்த காங். பிரமுகர்!

கட்சி தலைவர் ஒருவர் சென்னையில் தனது மனைவியை அபகரித்ததுடன் சொத்திலும் பங்கு கேட்டதால் காங்கிரஸ் பிரமுகர் ஆள் வைத்து கொலை செய்துள்ளார். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த காங். பிரமுகரான கோபால். 55 வயதான கோபாலின் மனைவி கவுரி. இவர் சில ஆண்டுகள் முன்னதாக கோபாலை பிரிந்துள்ளார். மாங்காடு பகுதியை சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவரான ராஜாஜி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாஜி, கவுரியை தனது மனைவி என்று சொல்லி இருவரும் […]

Continue reading …

அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

Comments Off on அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் […]

Continue reading …

மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

Comments Off on மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

மாநகராட்சியிடம் நாய் வளர்ப்பவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. நாய் பொதுமக்களை கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் […]

Continue reading …

கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து!

Comments Off on கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரையிலிருந்து தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே-18, 19 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue reading …

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை!

Comments Off on இன்றிரவு கொட்டப்போகுது கனமழை!

அக்னி நட்சத்தில் பொதுவாக வெயில் கொளுத்தும். ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமாக கோடை காலத்தில் தமிழக முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், […]

Continue reading …