Home » Archives by category » சென்னை (Page 5)

ஓடும் காரில் உதவி கேட்ட சிறுமி!

Comments Off on ஓடும் காரில் உதவி கேட்ட சிறுமி!

“காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று ஓடும் காரிலிருந்து 15 வயது சிறுமியின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சென்னை தி.நகர் அருகே ஓடும் காரில் திடீரென ஒரு சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த கார் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காருக்கு உரியவர் மகேந்திரன் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் […]

Continue reading …

ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

Comments Off on ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். நான்கு வெளிநாட்டவர் உள்ளிட்ட 5 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போதைப் பொருள் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்ற திரை உலக பிரபலம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.2000 கோடி அளவுக்கு போதை […]

Continue reading …

இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

Comments Off on இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

வரும் 2024 ஜுலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Continue reading …

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில […]

Continue reading …

வாரிசு சான்றுக்கு பொய்யான தகவல்! உயர் நீதிமன்றம் அதிரடி!

Comments Off on வாரிசு சான்றுக்கு பொய்யான தகவல்! உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரிசுரிமை சான்று கோரி பொய் தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே […]

Continue reading …

காதலி முன்னே காதலன் ஓட ஓட விரட்டி படுகொலை!

Comments Off on காதலி முன்னே காதலன் ஓட ஓட விரட்டி படுகொலை!

நடுரோட்டில் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் உதயா என்ற உதயகுமார் (22). இவர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கர […]

Continue reading …

சென்னை வானிலை மையம் தகவல்!

Comments Off on சென்னை வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் […]

Continue reading …

தென்னக ரயில்வேயின் அறிவிப்பால் அதிர்ச்சி!

Comments Off on தென்னக ரயில்வேயின் அறிவிப்பால் அதிர்ச்சி!

திருவண்ணாமலைக்கு இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மே 2ம் தேதி […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் காவல் 36-வது முறை நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் காவல் 36-வது முறை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலை ஜுன் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3000 […]

Continue reading …

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமா?

Comments Off on சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமா?

திடீரென சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிராட்வே பேருந்து நிலையம் திடீரென தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிராட்வே பேருந்து நிலையமும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சென்னை தீவு திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மல்டி மாடல் இன்டெக்கரேஷன் என்ற […]

Continue reading …