
பாஜக ஒருநாளும் இந்தி திணிப்பை அனுமதிக்காது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல கட்சிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை இணைப்பு மொழி என […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இரண்டூ “கல்”தான் காரணம் என்று பெருமிதமாக பேசியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 2 “கல்”தான் காரணம் என்றும், அவற்றில் ஒரு கல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் என்றும் இன்னொரு கல் இளைஞர் அணி தலைவர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கல் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் […]
Continue reading …
சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டள்ளது. பாலியல் தொல்லையால் கைது இவர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியில் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். 2 வழக்குகளில் முன்ஜாமீன் […]
Continue reading …
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை சுய விருப்பத்தின் பேரில் கடைபிடிக்கலாம் அறிவித்தது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் முககவசம் அணியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு 20ஆக […]
Continue reading …
இ-அலுவலக முறைக்கு முற்றிலுமாக தமிழ்நாடு தலைமைச் செயலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மின்னணு அலுவலக முறைக்கு மாற்ற கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தற்போது மின்னணு அலுவலக முறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 6 துறை இ&-அலுவலகமாக மாற்றப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகங்களை மாற்றும் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை […]
Continue reading …
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இரண்டாயிரம் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியொன்றில் கூறியுள்ளார். போக்குவரத்து துறைக்கு என தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்தார்.
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
Continue reading …
தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்… சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. இதேபோல, சென்னையோடு […]
Continue reading …
பால் மற்றும் கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. ஆம், கேஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து […]
Continue reading …
நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் என சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து அந்த செய்தியில், “சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு […]
Continue reading …