Home » Archives by category » சென்னை (Page 57)

பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

Comments Off on பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

ரஜினி கட்சியின் அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்திக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் புத்தாண்டு 2021 -ல் முதல் தேதி அன்று கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினி நேற்று அறிவித்தார். மேலும் பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக உள்ள அர்ஜூன மூர்த்தியை தனது கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகர் ரஜினி நியமித்துள்ளார்.மேலும், தனது கட்சியில், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் விவரங்கள் இதோ!!!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் விவரங்கள் இதோ!!!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நீதிபதிகள் திரு கோவிந்தராஜூலு சந்திரசேகரன், திரு ஏ.ஏ.நக்கீரன், திரு வீராசாமி சிவஞானம், திரு கணேசன் இளங்கோவன், திருமதி ஆனந்தி சுப்ரமணியன், திருமதி கண்ணம்மாள் சண்முகசுந்தரம், திரு சத்தி குமார் சுகுமாரா குருப், திரு முரளி சங்கர் குப்புராஜூ, திருமிகு மஞ்சுளா ராமராஜூ நல்லையா மற்றும் திருமதி தமிழ்செல்வி டி.வலயபாளையம் ஆகியோரை மூப்பு வரிசை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக […]

Continue reading …

முன்னாள் நீதிபதி அதிரடி கைது காரணம் என்ன?

Comments Off on முன்னாள் நீதிபதி அதிரடி கைது காரணம் என்ன?

நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பிடிபட்டது.

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பிடிபட்டது.

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை, சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னை வரும் இன்டிகோ விமானத்தில் பெண் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், இன்று  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த உமாகொலுசு பீவி, மகாரிபா பீவி, மதுரையைச் சேர்ந்த குணசுந்தரி ஆகிய பெண் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. பசை வடிவிலான தங்கம் 11 பாக்கெட்டுகளை இவர்கள் தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்தனர். அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவற்றில் 604 கிராம் அளவுக்கு சுத்த தங்கம் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.31.41 லட்சம். மகாரிபா பீவி என்பவர் மீது ஏற்கனவே, கடத்தல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டார்.             விமானத்திலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பயணி இருக்கை ஒன்றின் கீழ், துணிப் பை ஒன்று மீட்கப்பட்டது. அதில் 802 கிராம் எடையில் 5 தங்க துண்டுகள் டேப் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.   இவற்றின் மதிப்பு ரூ.41.71 லட்சம். இந்தப் பையை யாரும் உரிமை கோரவில்லை. மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.73.12 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Continue reading …

நிவர் புயல் தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு!!!

Comments Off on நிவர் புயல் தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு!!!

‘‘நிவர்’புயல் சென்னை அருகே கடக்கவுள்ளதால், சென்னை துறைமுகத்துக்கு 6ம் எண் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் இருந்த 4 சரக்கு கப்பல்கள், ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டன. கப்பல்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  கடலோர காவல் படை, கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பல்கள் துறைமுகத்தில் உள்ள ஜவகர் படகுத்துறையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.  புயல் தீவிரத்தின் அடிப்படையில், துறைமுகங்களில் உள்ள கிரேன்களை மற்றும் இதர சாதனங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரேன்கள் எல்லாம் துறைமுகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கன்டெய்னர் லாரிகளை 18.00 மணிக்கு மேல் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் வாகனங்கள் உள்ளே வந்தவுடன், துறைமுகத்தின் கதவு மூடப்படும் என சென்னை துறைமுக கழகத்தின் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continue reading …

டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

Comments Off on டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றம் அதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கும். மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை. மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. மெரினா லூப் சாலையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி 1 கிலோ தங்கம் பிடிபட்டது !!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி 1 கிலோ தங்கம் பிடிபட்டது !!

உளவுத் தகவல் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப்(24), இண்டிகோ விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்(39) ஆகியோரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் முகமது ஆசிப்பிடம் நடத்திய சோதனையில், 140 மற்றும் 123 கிராம் எடையில் 2 தங்கப் பசை பாக்கெட்டுகள், அவரது பேன்ட் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈகே-0542 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முர்சின் இப்ராகிம், 42,  பரக்கத் அலி சதுருதீன், 45, ஆகிய பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை விசாரித்த போது தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை சோதனையிட்டபோது 166 கிராம் எடையுடைய இரண்டு பொட்டலங்களில் இருந்து 146 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. மேலும் 66 கிராம் எடையிலான இரண்டு தங்கத் துண்டுகளும், 30 கிராம் எடையிலான ஒரு தங்கச் சங்கிலியும் கண்டறியப்பட்டன. […]

Continue reading …

தவறைத் தவிர்த்திருக்கலாம் – சூப்பர் ஸ்டார் ரஜினி ட்வீட்!

Comments Off on தவறைத் தவிர்த்திருக்கலாம் – சூப்பர் ஸ்டார் ரஜினி ட்வீட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் சொத்து வரி விதித்ததை குறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை அடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐகோர்ட்டு கண்டனத்தை தெரிவித்தது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறியும் மற்றும் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை அடுத்து அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. இதனை குறித்து ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில்; ராகவேந்திரா […]

Continue reading …

கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா – சந்தை மூடப்படுமா?

Comments Off on கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா – சந்தை மூடப்படுமா?

மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலும் பரவியது. கொரோனாவால் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் மே 5 ஆம் தேதி மூடப்பட்டது . இதன் பின்பு மூன்று மாதத்துக்கு மேல் மூடப்பட்டு இருந்து மார்க்கெட் செப் 28 ஆம் தேதி திறக்கப்பட்டது . பொருட்கள் வாங்க வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை […]

Continue reading …