சென்னை,மே 8 ஆவின் வரலாற்றில் இல்லாதவகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது ஆவின் நிர்வாகம். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா.வள்ளலார் இ.ஆ.ப வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஆவின். இந்த இக்கட்டான நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் […]
Continue reading …சென்னை,மே 8 கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனைத் […]
Continue reading …சென்னை,மே 8 மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5&ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் […]
Continue reading …சென்னை,மே 7 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் நேற்று புதிய உச்சம் எட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் 324 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 771 பேர் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. சென்னையில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முதலில் ஒற்றை இலக்கங்களிலும், பின்னர் இரட்டை இலக்கங்களிலும் இருந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் நூற்றுக்கும் […]
Continue reading …தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்
Continue reading …சென்னை,மே 6 இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த, 33,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித் தொகை வழங்குவதற்காக ரூபாய் 3,36,27,000/- (மூன்று கோடியே முப்பத்தாறு இலட்சத்து இருபத்திஏழாயிரம் மட்டும்) அரசால் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிருவாக அலுவலர்கள் மூலமாக மேற்கொண்டு விவரங்களை […]
Continue reading …கோவை, மே 6 கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது […]
Continue reading …சென்னை,மே 6 நாம் தொடர்ச்சியாக டாக்டர் தணிகாசலம் ஒரு போலி டாக்டர் என்றும், கொரனா விற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் என்று ஆதாரபூர்வமாக செய்திகளை வெளியிட்டுவந்தோம். அதேபோல் அவர் ஒரு டாக்டர் அல்ல, மனநோயாளி என்ப்தையும் தெரியப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இந்த நிலையில் தான் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் அவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்த […]
Continue reading …சென்னை,மே 5 கொரோனா வைரஸ் தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கால் பாலைவனம் போன்ற அரவம் இல்லாத நிலையில், ரத்தப்போக்குடன் வெள்ளாடு ஒன்று ஆட்டோவில் சென்னை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு அவசர நிலை என்பதை உணர்ந்த டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் சிகிச்சை மேஜையை தயார் செய்தார். அந்த ஆட்டுக்கு இது முதல் பிரசவம் என்பதுடன் குறைப் பிரசவமாகவும் காணப்பட்டதால், மிகவும் சிக்கலாக இருந்தது என மருத்துவர் நினைவு கூர்ந்தார். குறைமாதக் குட்டியின் தலையும், கழுத்தும் பக்கவாட்டில் […]
Continue reading …புது டெல்லி,மே 05 கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். […]
Continue reading …