Home » Archives by category » சென்னை (Page 72)

3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Comments Off on 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை, ஏப்ரல் 24 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் […]

Continue reading …

24 மணி நேரமும் செயல்படும் சென்னை சுங்கத் துறை !

Comments Off on 24 மணி நேரமும் செயல்படும் சென்னை சுங்கத் துறை !
24 மணி நேரமும் செயல்படும் சென்னை சுங்கத் துறை !

சென்னை, ஏப்ரல் 24 கோவிட்-19 முடக்கநிலை சூழ்நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி (எக்ஸிம்) சரக்குகளைக் கையாள வசதியாக சென்னை சுங்கத் துறை எல்லா நாட்களும், 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை சுங்கத் துறையின் துறைமுகம், விமான நிலையம், விமான சரக்குப் பிரிவு, வெளிநாட்டு தபால் அலுவலகம், கூரியர் முனையம் மற்றும் யூ.பி. ஆகிய இடங்களில் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும், தினமும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறைவான அலுவலர்களைக் கொண்டு சுங்கத் துறை அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னுரிமை அடிப்படையில் அனைத்து அனுமதிகளும் அளிக்கப்படுகின்றன. A. சென்னை […]

Continue reading …

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

Comments Off on சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

கோவை, ஏப்ரல் 24 பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும், அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பூமி தினம் (ஏப்ரல் 22) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Union for Conservation of Nature) இந்திய உறுப்பினர்கள், கோவிட் 19 பிரச்சினைக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆன்லைனில் […]

Continue reading …

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !

Comments Off on இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !
இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !

சென்னை, ஏப்ரல் 24 இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து, சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை,  இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே  தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க நேரம் வந்துவிட்டது. ஆந்திர மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் […]

Continue reading …

திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

Comments Off on திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!
திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

சென்னை, ஏப்ரல் 23 திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள்  சிரமமின்றி வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் நோயால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய 21679 உறுப்பினர்களுக்கு,கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.1000/- ஐ வழங்கிட 09.04.2020 அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் 13.4.2020 அன்று ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து […]

Continue reading …

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

Comments Off on கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

சென்னை, ஏப்ரல் 23 கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று […]

Continue reading …

குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

Comments Off on குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!
குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

சென்னை, ஏப். 22, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பிராட்வே பகுதியில் குழாயை தொடாமலேயே கை கழுவும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, பெருநகர சென்னை மாநகராட்சி, ‘யங்க் இந்தியன்ஸ்’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்துள்ளது. தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தேவையான பல நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றப்படுவதை உறுதிபடுத்தும் வகையில், சென்னையில் உள்ள, பேருந்து நிலையங்கள், […]

Continue reading …

கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

Comments Off on கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஏப்ரல்22  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை : கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்றுபணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிறஅரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சிஅமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர் பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் […]

Continue reading …

கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

Comments Off on கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!
கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

சென்னை, ஏப்ரல்22 கோவிட்-19 க்கு எதிராக அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி BIT வளாகம் முன்முயற்சி எடுத்து விடுத்துள்ள இந்தத் திட்டத்தில். மும்பை ஐ.ஐ.டி யில் இயங்கும் Spoken Tutorial Project, சென்னையிலுள்ள Madras School of Social work (MSSW), புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு மய்யமாக பெங்களுரில் இயங்கும் Derbi Foundation, பேரிடர் மேலாண்மையில் சிறப்பான அனுபவங்களையும் பயிற்சிகளையும் கொண்ட நிறுவனம் என இந்தியா […]

Continue reading …

மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

Comments Off on மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!
மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

சென்னை, ஏப்ரல், 21 தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த மரு.சைமன் அவர்களின் சடலத்தினை அடக்கம் செய்ய சென்றபோது, அன்னாரின் உறவினர்கள், சவ ஊர்தி ஓட்டுநர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட 21 […]

Continue reading …