உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நாளை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
பின்பு ராமஜென்மபூமி தீர்த்தத்தில்ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆனால், பணிகள் ஆரம்பிக்கும் நிலைமையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.
தற்போது அங்கு இருக்கும் குபேர திலா கோயிலில் சிவனுக்கு பூஜை நடத்தப்பட்டு நாளை கட்டுமான வேலைகள் தொடரும் என கோவில் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.