கொரோனாவின் ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் உதவி செய்தார் ராகவா லாரன்ஸ். தற்போது அவரின் ஆதரவற்ற இல்லத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
நடிகர் லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஓன்று சென்னை அசோக் நகரில் உள்ளது. அந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அந்த இல்லத்தில் உள்ள அதே பகுதியில் இரண்டு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இல்லத்தில் உள்ள 30 பேரில் 20 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் இல்லத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் மூலம் பரவியது என கூறப்படுகிறது.