கொரோனா வைரசால் மேலும் ஒரு காவலர் பலி – துக்கத்தில் காவலர்கள்!

Filed under: சென்னை |

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியாகியுள்ளார்.

மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜ். இவர் சென்னையிலுள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சிகிச்சை பலனில்லாமல் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை காவலர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.