கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அதிக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை அழிக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமான இறங்கியுள்ளது.
ஆனால், இதுவரை தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் எதுவும் 50 சதவீதம் கூட நல்ல பலன் கொடுக்கவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்தை பற்றி அவர் கூறுகையில்; அந்த மருந்து நீண்ட நாட்கள் வரை பாதிப்புகளை குணப்படுத்துமா என்பது சந்தேகமாக உள்ளது என கூறியுள்ளார்.