வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜயின், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது, அதில் முறைகேடு செய்யவே முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்று கூறினார்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விட்டும் இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.