லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்து. அப்பகுதியில் உள்ள மக்களை பீதியில் உள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி பெய்ரூட்டில் மூன்றாயிரம் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் அந்த தலைநகரமே சிதறியது. இதில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது போன்ற வெடிவிபத்து லெபனான் வரலாற்றிலேயே மோசமானது.
தற்போது, பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள டயர்கள் வைத்துள்ள கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீ சில நிமிடத்திலேயே பயங்கரமாக பரவ துவங்கியது. இந்த விபத்துக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.