மகாராஷ்டிராவில் கேரளாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா – எதற்கு இந்த முடிவு?

Filed under: இந்தியா |

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். தற்போது, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாள்தோறும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.

தற்போது மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் மும்பை பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வந்த கேரளாவை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்த ராஜினாமாவிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

ஆனால் பணியின் சுமைதான் அதிகமாக இருந்ததால் ராஜினாமா செய்துவிட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் 600க்கும் மேல் உள்ள செவிலியர்கள் ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது