ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஒரு அசத்தலான ஐபிஎல் லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது இதனால் அனைத்து ஐபிஎல் அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டனர். இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அவருக்குப் பிடித்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இதோ அந்த அணியின் வீரர்கள்: அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். அதன் பின் ஏபி டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா மற்றும் ஆல்-ரவுண்டராக தன்னையும் ஆண்ட்ரூ ரசலையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பராக எம்.எஸ் தோனியையும், சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கையும் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் மோகித் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.