ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிளாஸ்மா தானம் வழங்கினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Filed under: இந்தியா |

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் அதன் குணமடைந்து எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள் பிளாஸ்மா தானம் அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மா தானம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை கொடுத்த பின்பு குணமடைந்தார். இதனால் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் இருக்கும் எஸ் சி பி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிளாஸ்மா நேற்று பிளாஸ்மா தானம் வழங்கி உள்ளார்.

இந்தத் தகவலை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.