இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏபிஜே அப்துல் கலாம். பின்பு பள்ளிப்படிப்பு, இயற்பியல் பட்டம் மற்றும் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்காக பல சிறப்பான திட்டங்களுக்கு பங்களிப்பாக இருந்தவர். இந்தியாவின் அணு சக்தியை வலுப்படுத்த முக்கியமாக இருந்தவர். இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ-வுக்கு பெரும் பங்களிப்பை அளித்தவர்.
இதை அடுத்து, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக வேலை பார்த்த சமயத்தில், அவர் மாணவர்களோடு பெருமளவில் உரையாடுவதை தொடர்ந்து வந்தார். இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு மாணவர்கள் அயராமல் உழைக்க வேண்டும் என தெரிவித்து வந்தார். பின்பு 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ம் தேதி காலமானார். இன்று இவருடைய பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனைக் குறித்து அவர் ட்விட்டர் பதிவில்; டாக்டர் அப்துல் கலாமுக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய வளர்ச்சிக்கு அவர் அழியாத பங்களிப்பை இந்தியாவால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் ஒரு விஞ்ஞானியாகவும், இந்திய ஜனாதிபதியாகவும் இருக்கலாம். அவரது வாழ்க்கை பயணம் மில்லியன் கணக்கானோரின் பலத்தை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.