மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அவருடைய இரங்கல் செய்தியில்; மத்திய உணவுத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்துள்ளது. எட்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் தலைவர் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
இதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை சீராக உள்ளது என்ற செய்தி நமக்கெல்லாம் ஆறுதலை தந்தது ஆனால் இன்று அவரது உயிர் பிரிந்து இருக்கிறது அரசியல் வேறுபாடுகளை எல்லாம் தவிர்த்து அனைவரும் அன்பு பாராட்டிய தலைவர் அவர். மாண்புமிகு பாரத பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் நீண்ட நல்லுறவு மேற் கொண்டவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது சார்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.