அரசியல் லட்சியம்; தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது கனவாகவே இருக்கும் – ரஜினியுடன் மோதும் மீராமீதுன்!

Filed under: அரசியல் |

நடிகை மீரா மிதுன் சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் விஜய், சூர்யா இருவரை சர்ச்சையாக பற்றி பதிவிட்டார். இதற்கு விஜய் மாற்று சூர்யா ரசிகர்கள் மீராமீதுனை கடுமையாக திட்டி கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

தற்போது இவர்கள் இருவரை அடுத்து சூப்பர் ரஜினிகாந்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

நேற்று இவருடைய ட்விட்டர் பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பதிவிட்டது; சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகள் என்பது எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பஸ் கண்டக்டராக இருந்து சிறந்த நடிகராக வந்த வந்திருக்கிறார். நான் கூட சொல்வேன் அவர் ஒரு கிரேட். ஆனால், அவருடைய அரசியல் லட்சியமும் மற்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கனவும் கனவாகவே இருக்கும்.

54 வருடங்களாக அதிமுகவும், திமுகவும் நம்முடைய மாநிலத்தை பாதையை தெளிவாக கட்டிவருகிறார்கள். இதனால் ரஜினிகாந்த் விலகி செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மீராமிதுன் இந்த பதிவால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மீராமீதுனை பற்றி திட்டி சம்பந்திகள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.