கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த சமயத்தில் ஜூன் 26ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்ற ரஜினி, சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அபராதம் கட்டிருப்பது தெரியவந்தது.
இந்த பயணத்தால் நடிகர் ரஜினிகாந்த இ-பாஸ் பெற்றாரா என்கிற கேள்விகள் எழுந்தது. ஆனால், தற்போது ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கொண்டு தான் சென்றிருக்கிறார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அந்த இ-பாஸ் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வாங்கிருக்கிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார் பிரகாஷ்.