பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி – பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!

Filed under: விளையாட்டு |

கொரோனா வைரஸ் காரணத்தினால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது வீரர்கள் பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் துவங்கி உள்ளனர். அதில் புஜாரா, முகமது சமி, இஷாந்த் சர்மா, போன்றோர் தங்களுடைய பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.

தற்போது 13 வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அணியின் துணை கேப்டன் ரெய்னா டேட்டிங் பயிற்சியில் தொடங்கியுள்ளார். அவருக்கு சென்னை அணியின் புது வீரர் பியுஸ் பந்து சாவ்லா வீசியுள்ளார். இதன் பின்னர் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியும் சுரேஷ் ரெய்னாவுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி உள்ளார். இவர்கள் மூவரும் உத்தரபிரதேசத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.