Home » Posts tagged with » Netrikkan (Page 401)

பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

Comments Off on பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

இன்று மரணமடைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை செய்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ராஜீவ்காந்தி […]

Continue reading …

பிரதமர் மோடி – ரிஷி சுனக் சந்திப்பு!

Comments Off on பிரதமர் மோடி – ரிஷி சுனக் சந்திப்பு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை […]

Continue reading …

மகாராஷ்டிராவில் அம்மை நோய்க்கு 2 பேர் பலி!

Comments Off on மகாராஷ்டிராவில் அம்மை நோய்க்கு 2 பேர் பலி!

அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிக்கப்பட்டதுடன், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 126 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பேர் அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் தற்போது 4 பேர் தீவிர சிகிச்சைப் […]

Continue reading …

தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Comments Off on தமிழ்நாடு அரசு நடவடிக்கை

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர முடியாத 777 மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தில், 2021&-22ம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு முடித்துவிட்டு, ஏழ்மை, வறுமையின் காரணமாக உயர்கல்வி செல்ல முடியாத 777 மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு கலை மற்றும் அறியல் கல்லூரிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வரவழைத்து மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் கல்லூரியில் உள்ளதா எனத் […]

Continue reading …

ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!

Comments Off on ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளவர். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து “இறுதிச்சுற்று” என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரித்திகா சிங் நடித்திருந்தாலும், அவரால் பிரபலமாக முடியவில்லை. இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் “கிங் ஆப் கோதா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்பாடல் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Continue reading …

விஜய் சேதுபதியின் படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகியதா?

Comments Off on விஜய் சேதுபதியின் படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகியதா?

இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதி நடித்துள்ள 46வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்குமென கூறப்படுகிறது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான […]

Continue reading …

மாணவன் பலி!

Comments Off on மாணவன் பலி!

மாணவன் ஒருவன் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் தங்கமணியின் மகன் திவாகர். இன்று பள்ளிக்குச் சென்றபோது, பள்ளிபேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, படியில் நின்றிருந்த திவாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவல் […]

Continue reading …

குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல்?

Comments Off on குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல்?

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் திடீரென 18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற தொகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள அஞ்செலி என்ற ரயில் நிலையத்தில் ரயில்களை […]

Continue reading …

ஜி 20 உச்சி மாநாடு நாளை ஆரம்பம்!

Comments Off on ஜி 20 உச்சி மாநாடு நாளை ஆரம்பம்!

பிரதமர் மோடி நாளை இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்படுகிறார். உலக பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் சேர்ந்த அமைப்பு ஜி20 எனப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இந்தியா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் என மொத்தம் 20 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜி20 உச்சி மாநாட்டை ஒவ்வொரு […]

Continue reading …

‘பிரின்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘பிரின்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 25ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம். திரையரங்குகளில் வெற்றி பெறாத பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் ஓடிடியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue reading …