Home » Posts tagged with » Netrikkan (Page 446)

சண்டிகரில் பல்கலைகழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை!

Comments Off on சண்டிகரில் பல்கலைகழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை!

மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரத்தால் சண்டிகரில் பல்கலைக்கழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டார். பல்கலைகழகத்தில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கிஇடையே மாணவிகள் […]

Continue reading …

செல்பி மோகத்தால் இருவர் பலி!

Comments Off on செல்பி மோகத்தால் இருவர் பலி!

செல்போனில் செல்பி எடுக்கும் மோகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த 2 பேர் பலியான சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையையடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20 வயது), மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட் என்பவரும் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் […]

Continue reading …

ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

Comments Off on ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நேற்று மாலை வாங்கிய லாட்டரியில் இன்று ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் இன்று நடைபெற்றது. இக்குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது. இதையடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததற்காக ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். […]

Continue reading …

‘அவள் அப்படிதான்’ திரைப்படம் ரீமேக்!

Comments Off on ‘அவள் அப்படிதான்’ திரைப்படம் ரீமேக்!

1978ம் ஆண்டு வெளியான ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து நடித்து திரைப்படம் ‘அவள் அப்படிதான்’. 1978ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் “அவள் அப்படிதான்.” இயக்குனர் ருத்ரையா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் ரிலீஸின் போது படுதோல்வியடைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அப்படத்தின் மீதான விமர்சனங்கள் மாறி இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் கிளாசிக் படங்களுள் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது 44 ஆண்டுகள் கழித்து இப்படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் […]

Continue reading …

நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

Comments Off on நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

நடிகர் அஜீத் நடு ரோட்டில் பைக்குக்கு பஞ்சர் போட்டு உதவிய தகவலை பைக்கர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத் குமார். அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பைக் பயணம் மீது தீராத ஆர்வம் கொண்டவர். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அஜீத்துடன் லடாக் பைக் பயணம் மேற்கொண்டார். அதை […]

Continue reading …

யுஜிசி புதிய உத்தரவு!

Comments Off on யுஜிசி புதிய உத்தரவு!

யுஜிசி கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் ராகிங்கை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி அமைக்க இந்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ராகிங் எனப்படும் சீண்டல் குற்றங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராகிங் குற்றங்களை குறைக்க கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ராகிங் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுஜிசி […]

Continue reading …

திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைகிறாரா?

Comments Off on திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைகிறாரா?
திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைகிறாரா?

குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் பாஜகவில் இணையபோவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜகவினர் முடித்து விட்டதாகவும் விரைவில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறானது என்றும், திமுக எம்எல்ஏக்கள் பெயர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவதூறு பரப்பப்பட்டு […]

Continue reading …

30 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு!

Comments Off on 30 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு!

30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் திரையரங்குகளை திறக்க ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ஜம்மு காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திறந்து வைக்கப்பட்டன. இந்த திரையரங்குகளை ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் சினிமா ரசிகர்கள் […]

Continue reading …

முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!

Comments Off on முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!
முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!

முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவிலுக்கு ரூ.1.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். முகேஷ் அம்பானி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவ்வகையில் இன்று அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் […]

Continue reading …

பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

Comments Off on பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றி கூறிய அமைச்சர் நாசர், “ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் […]

Continue reading …