Home » Posts tagged with » Netrikkan (Page 448)

சிம்பு படத்தைப் பற்றி லோகேஷின் கருத்து!

Comments Off on சிம்பு படத்தைப் பற்றி லோகேஷின் கருத்து!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிம்பு மற்றும் கவுதம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் “நாயகன்” படத்தின் ரெபரன்ஸ் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “மாநாடு” திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படமான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. சிம்புவின் “மாநாடு” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

Continue reading …

ஆசிரியர் மீது பதியபட்ட வழக்கில் திருப்பம்!

Comments Off on ஆசிரியர் மீது பதியபட்ட வழக்கில் திருப்பம்!

ஆபாச பாடம் நடத்தியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆசிரியர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது […]

Continue reading …

மாணவியை மணமுடித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

Comments Off on மாணவியை மணமுடித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அஜித் மற்றும் 12ம் வகுப்பு மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். […]

Continue reading …

கார் மோதி இரு பெண்கள் பலி!

Comments Off on கார் மோதி இரு பெண்கள் பலி!

130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியில் இரண்டு பெண்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.லட்சுமி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த எஸ்.லாவண்யா இவ்விரு பெண்களும் பிசிலி ஸ்டேட் ஸ்ட்ரீட் சர்வீசஸ் நிறுவனத்தில் ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இரவு வேலை முடிந்து பழைய மகாபலிபுரம் சாலையை (ஓஎம்ஆர்) கடக்கும் போது, ​​அதிவேகத்தில் சென்ற கார் பின்னால் இருந்து மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 20 வயதான மோதிஷ் குமார் […]

Continue reading …

40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே; முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on 40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே; முதல்வர் ஸ்டாலின்!

திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி” என்று உரையாற்றி உள்ளார். திமுகவின் முப்பெரும் விழா நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்ற வகையில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இவ்விழா அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமியின் கேள்வி!

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் கேள்வி!

எடப்பாடி பழனிசாமி ஆ.ராசா சொன்ன அந்த வார்த்தை.. திமுக குடும்பதிற்கும் பொருந்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி. ஆ.ராசா சமீபத்தில் இந்து மதம் குறித்து கருத்துகள் கூறியுள்ளார். திமுக தலைவர் குடும்பத்திற்கு பொருந்துமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது. ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த கருத்துகள் திட்டமிட்டே இந்துக்களை அவமதிக்கும் நோக்கில் பேசப்படுவதாக பாஜக தமிழக தலைவர் […]

Continue reading …

கோவையில் ஒரு சதுரங்க வேட்டை!

Comments Off on கோவையில் ஒரு சதுரங்க வேட்டை!

சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கோவையில் தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி மளிகைக்கடை வியாபாரி ஒருவரை இரண்டு பேர் ஏமாற்றிய சம்பவம் நடந்தேறியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அடிக்கடி அப்பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். ஒரு நாள் சதாசிவத்திடம் பேசியவர்கள் தாங்கள் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாகவும், மீத நேரங்களில் கூலி வேலைக்கு சென்று […]

Continue reading …

விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

Comments Off on விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு “நாங்க ஆட்சிக்கு வரும்போது நல்லா மாட்டுவீங்க..!” என்று எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. மேலும் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதித்ததாக வழக்கும் உள்ளது. இன்று தமிழக […]

Continue reading …

எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர்; ஸ்டாலின் வரவேற்பு!

Comments Off on எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர்; ஸ்டாலின் வரவேற்பு!

மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை, நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகநீதி வரலாற்றில் […]

Continue reading …

நடிகர் வடிவேலு பிறந்த நாள் கொண்டாட்டம்!

Comments Off on நடிகர் வடிவேலு பிறந்த நாள் கொண்டாட்டம்!

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை “மாமன்னன்” படப்பிடிப்பில் படக்குழு கொண்டாடியுள்ளது. உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பரியேறும் பெருமாள்,” “கர்ணன்” ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகியாக நடித்து வருகிறார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். உதயநிதியின் […]

Continue reading …