இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68வது பிறந்தநாள். இதை அவரின் குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படமும் மிக வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், சகோதரர் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
அவரின் செய்தி குறிப்பில், வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.