இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1,115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் 7 லட்சத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 வைரஸிருந்து குணமடைந்துள்ளனர். ஆகவே இதன் விகிதம் 61.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.