லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் லடாக் எல்லையில் சீனா ராணுவம் படைகளை குவித்து இந்தியா ராணுவத்தை துன்புறுத்திவந்தது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்க படைகளை குவித்தது.
இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவாக்கியது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் திர்க்க இரண்டு நாடுகளும் முன்வந்து இரண்டு நாடு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது லடாக் பகுதியில் இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இந்த மூன்று பேர் வீரமரணத்தை அடுத்து லடாக்கில் உருவாகியுள்ள பதற்றத்தை குறைக்க இந்திய – சீனா ராணுவ உயர் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர். இதில் சீனா ராணுவம் தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.