அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அசத்தலான வீடியோவை அவருடைய பிரச்சாரக் குழு வெளியிட்டுள்ளது.
FOUR MORE YEAR என்ற தலைப்பில் வெளியாகிய வீடியோவில்; ஹூஸ்டனில் சென்ற ஆண்டு நடைபெற்ற “HOWDY MODI” நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அமெரிக்கா அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட காட்சிகள் மற்றும் சென்ற பிப்ரவரி மாதம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற “NAMASTE TRUMP” பிரதமர் மோடியும் அமெரிக்கா அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளது.
அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் மேலான இந்திய வம்சாவளி மக்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.