காரில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்; இதைப் பார்த்த விஷ்ணு விஷால் செய்த தரமான சம்பவம்!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தும் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வீடியோவை பதிவிட்டு, அதில் காவல்துறையை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் சென்றிருக்கும் காரிலிருந்து வெளியே நின்று கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இதை வீடியோவாக எடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

அந்த பதிவில்; நம் நாட்டின் படித்த இளைஞர்கள் கூட இப்பிடிப்பட்ட செயல்களை செய்கிறார்கள். பொதுவாக நான் இதை செய்ய மாட்டேன். ஆனால், இதை பதிவு செய்வது வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரை மட்டும் பணயம் வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்யும் விதமாக இருக்கின்றது. இப்பிடிப்பட்ட தேவையற்ற ஸ்டண்ட் செய்து அப்பாவிகளும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தயவுசெய்து இதை பற்றி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதன் பின்பு இந்த விடியோவை பார்த்த காவல்துறை உடனே நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மற்றும் வீடியோ எடுத்த தேதி மற்றும் நேரம் பற்றிய தகவலை அனுப்புமாறு காவல்துறை விஷ்ணு விஷாலிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.