ஆன்லைன் சூதாட்டத்தில் ஐடி ஊழியர் தற்கொலை!

Filed under: சென்னை |

ஆன்லைன் சூதாட்டத்தில் விறையாடி ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் ஐ.டியில் பணிபுரியும் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் போது பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மேல் இருந்த மோகத்தினால் அவருடைய 20 சவரன் தங்க நகையை சகோதரியிடம் கொடுத்து ரூ.30 லட்சம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். இந்த சூதாட்ட விளையாட்டில் தொகையை இழந்ததால் பவனா அவரது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.