‘இங்க என்ன சொல்லுது ‘ டிசம்பர் 5- இசை வெளியீடு

Filed under: சினிமா |

IMG_3421‘ இங்க என்ன சொல்லுது ‘ படத்தின் இசை  வருகின்ற 5 ஆம் வெளியிட படுகிறது .  இது  வரை வெளி வராத கதை களத்தின்  பின்னணியில் , நகைசுவை இழை ஓட படமாக்க பட்ட இங்க என்ன சொல்லுது திரை படத்தில் கதாநாயகனாக வி .டி.வீ. கணேஷ் நடிக்க அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின்  நடித்து உள்ளார்.  S T R  இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து உள்ளார்.கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து , நகை சுவை மிளிர எடுக்க படும் இந்த படத்தின் முக்கிய நடிகர்கள் பாண்டியராஜன்,மயில் சாமி, இயக்குனர் கே. எஸ் . ரவி குமார், ஆகியோருடன் ஆகியோருடன் ஸ்வர்ணமால்யா   நடித்து உள்ளார். இப்படத்தில் பட தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  உள்ளார். இசை அமைப்பாளர் தரனின் இசையில் வானவில் போல ஏழு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நிறமும் ஒரு குணமும் உண்டு. இந்த பாடல் தொகுப்பின் முக்கிய அம்சம் கணேஷ் இயற்றிய இரண்டு பாடல்களும் அதில் அவரே பாடிய ஒரு பாடலும் . தனது வித்தியாசமான குரலால் தனி இடம் பிடித்த கணேஷ் பாடும் பாடல்  பட்டாம் பூச்சியின் வாழ்கையை பற்றிய தத்துவ பாடல் .