இந்தோனேசியாவில் நிலனடுக்கம்…இறப்பு எவ்வளவு..?

Filed under: Uncategory,உலகம் |

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது, இதில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

இதில் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில்638 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணி நீடித்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.