இன்றுடன் முடிந்தது பத்தாம் வகுப்பு தேர்வுகள்!

Filed under: தமிழகம் |

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமலே அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இந்த வருடம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடையும் என்றும், அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வின் இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. அவ்வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. 10ம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.